கள்ளத்தொடர்பில் காஞ்சி முதலிடம்! டெல்லி, மும்பையை விட முந்தியது! இதோ லிஸ்ட்!
திருமணத்தைத் தாண்டிய ரகசிய உறவுகளை (extramarital affairs) தேடுபவர்களுக்கான உலகப் புகழ்பெற்ற டேட்டிங் செயலியான Ashley Madison கடந்த ஜூன் 2025-இல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பட்டுச் சேலைகள், பழமையான கோயில்கள் மற்றும் ஆன்மிகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரம், இந்தியா முழுவதும் திருமணத்தை மீறிய கள்ள உறவுகளில் (அல்லது non-monogamy activity) முதலிடத்தை பிடித்துள்ளது. இது பலருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய அதிர்ச்சிகள்: கடந்த 2024-இல் 17வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம், ஒரே ஆண்டில் முதலிடத்துக்கு தாவியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. மும்பை கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு டாப் 20-இல் கூட இடம்பெறவில்லை. இந்தியாவில் tier-2 மற்றும் tier-3 நகரங்களில் Ashley Madison பயன்பாடு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிகிறது. டாப் நிலைகள் (Ashley Madison ஜூன் 2025 தரவு அடிப்படையில்): காஞ்சிபுரம் (தமிழ்நாடு) - முதலிடம் சென்ட்ரல் டெல்லி தென்மேற்கு டெல்லி / குர்கான் ...