அப்பா.. ரொம்ப வலிக்குது பா.. ப்ளீஸ் வேணாம்பா.. 11 வயது மகளை துடிக்க துடிக்க.. பெற்ற அப்பனே செய்த கொடூரம்..
கான்பூர் : தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை தூங்கும் நிலையில் மயக்க மருந்து கொடுத்து, கழுத்தை நெரித்து, பின்னர் கசாப்புக் கடை கத்தியால் அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் கான்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தைச் செய்த ரஞ்சன் (42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையை அவர் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் எப்படி நடந்தது? ஏப்ரல் 18, 2026 அன்று அதிகாலை 4:30 மணியளவில் கான்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “நான் பிளாட் நம்பர் G4-ல் இருந்து பேசுகிறேன். திருமதி அப்பார்ட்மெண்ட்ஸில் என் இரண்டு மகள்களையும் கழுத்து அறுத்துக் கொன்றுவிட்டேன். அவர்களது உடல்கள் என் அறையில் உள்ளன. வந்து என்னை கைது செய்யுங்கள்” என்று ரஞ்சன் தெரிவித்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் கிடந்தன. உடனடியாக ரஞ்சனை கைது செய்தனர். பின்னர் அறைக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த தாய் ரேஷ்மா (40)வை எழுப்பி சம்பவத்த...