Posts

Showing posts with the label vehicle collision

டாஸ்மாக் வீரனால் அட்டூழியம்! விரட்டி விரட்டி கார் ஏற்றிய போதை வீரன் யார் தெரியுமா?

Image
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே குண்டாறு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் மது அருந்திய பின்னர், போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய ஒரு நபர் ஏற்படுத்திய பெரும் கலவரம் மற்றும் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கபுளியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான நாகவடிவேல் என்பவர், கூட்டாளிகளுடன் டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார். தலைக்கேறிய போதையில் தள்ளாடும் நிலையில் காரை எடுத்து ஓட்டி வந்துள்ளார். கமுதி நோக்கி வரும் குறுகிய சாலையில், பின்னால் வந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரின் பைக்கிற்கு வழிவிடாமல் நடுவழியில் காரை நிறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், காரில் இருந்த கூட்டாளி ஒருவர் இறங்கி பைக் சாவியைப் பறித்து சண்டையிட்டுள்ளார். நாகவடிவேல் காரை ரிவர்ஸ் எடுத்து பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் அலெக்ஸ் பாண்டியன் காயமடைந்த நிலையில், நாகவடிவேல் தப்பி ஓடியுள்ளார். கமுதி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, போதையின் உச்சத்தில் கண்ணில் பட்ட அனைத்து பைக்குகளையும் வெறியுடன் இடித்துத் தள்ளத் தொடங்கியுள்ளார். சாலையோரம் நின்றிருந்த பல இருசக்கர வாகனங்கள், கார்கள் சேதமடைந்துள்ளன. மேல...