வசமாக சிக்கிய துல்கர் சல்மான்.. மகனின் ஆசையால் மாட்டும் மம்முட்டி.. என்ன காரணம் தெரியுமா..?
கொச்சி, செப்டம்பர் 24 : பூடானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களை முறைகேடாக விற்றதாகக் குற்றச்சாட்டில் கேரளாவில் உள்ள தொழிலதிபர்கள், நடிகர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறிவைத்து சுங்கத்துறை அதிகாரிகள் 'ஆபரேஷன் நம்கூர்' என்ற பெயரில் நடத்தி வரும் சோதனைகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மலையாள முன்னணி நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் வீடுகளிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் துல்கரின் லேண்ட் ரோவர் டிபெண்டர் காரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பூடான் நாட்டில் இரானுவ அதிகாரிகள் பயன்படுத்திய சொகுசு கார்களை குறைந்த விலையில் வாங்கி, அவற்றை இமாச்சல் பிரதேசத்தில் அதிக விலைக்கு விற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் கார்களை கேரளாவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபல நடிகர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாங்கியதாகத் தெரிகிறது. இதனால் அரசுக்கு முறையாக வரி செலுத்தப்படாமல் கோடிக்கணக்கான இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கின்றன. இந்த முறைகேடுகளை வெளிச்சம் போட 'ஆ...