“வெடித்து சிதறிய பெட்ரோல் டேங்கர் லாரி..” ஒரே நேரத்தில் 4 பேருக்கு நெஞ்சு வலி.. துடிதுடித்த பகீர் காட்சிகள்..!
திருவள்ளூர், செப்டம்பர் 23 : திருவள்ளூர் மாவட்டம், புதுநகர் பகுதியில் பெட்ரோலிய டேங்கர் லாரியை வெல்டிங் செய்யும்போது டேங்கர் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஊழியர் படுகாயமடைந்துள்ளார். அருகில் உள்ள கடைகள் சேதமடைந்தன. அதிர்ச்சியில் ஹோட்டலில் பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புதுநகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பெட்ரோலிய டேங்கர் லாரியை பராமரிப்பு பணியாக வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென டேங்கரில் இருந்து வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பின் சக்தியால் டேங்கர் சிதறி பறந்தது. இதனால் அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் கணிசமான சேதத்திற்கு ஆளானதாக தெரிகிறது.வெடிப்பு நிகழ்ந்ததும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அலறி அடித்து கொண்டு சிதறி ஓடினர். விபத்தில் ஈடுபட்டிருந்த வெல்டிங் ஊழியர் கடுமையான காயங்களுடன் தவறினார். அவர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருக...