Posts

Showing posts with the label woman complainant

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் வழிஞ்ச வழிசல்! இணையத்தில் கசிந்த ஆபாச சேட்டிங்!

Image
திண்டுக்கல் : புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் பழனி தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் குறைக்கும் விதமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் நேற்று (மே 24) அவரை உடனடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார். ஆபாச வாட்ஸ்அப் சாட்கள் வெளியாகி பரபரப்பு சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப் பிறகு, ராஜகோபால் மீது மேலும் பல புகார்கள் வரிசையாக எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவர் நடத்திய வாட்ஸ்அப் உரையாடல்கள் இணையத்தில் கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த சாட்களில்,- “உன்னிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? புடவையுடன் புகைப்படம் அனுப்பு”போன்ற அநாகரிகமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண் ம...