Posts

“எனது தாய், தந்தையை காங்கிரஸ் விமர்சிக்கிறது” - பிரதமர் மோடி

Image
யாருடைய குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் பாஜக விமர்சிப்பதில்லை எனவும் தனது தாய், தந்தையை தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் விமர்சிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.பி. ஜோஷி பேசுகையில், பிரதமர் மோடி, அமைச்சர் உமா பாரதி, பெண் சாமியார் சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு இந்துமதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது எனவும், அவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எனவும் சர்ச்சையாகப் பேசி இருந்தார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர், பிரதமர் மோடியின் அம்மா வயதுபோல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து செல்கிறது என்று பிரதமர் மோடியின் தாயாரை அவதாறாப் பேசினார். அந்த வரிசையில் மும்பையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உள்கட்சிக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ் முட்டம்வார் பேசுகையில், “நீங்கள் பிரதமராக வருவதற்கு முன் உங்களை யாருக்கும் அடையாளம் தெரியாது. இப்போதுகூட உங்களின் தந்தையின் பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையின் பெயர் ராஜீவ...

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோஃபியான் மாவட்டத்தில் கப்ரான் படாகுண்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களும் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்த துப்பாக் கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோஃபியான் மாவட்டம் முழுவதும் இணையதள சேவை முடக்க‌ப்பட்டுள்ளது.

உதவியவருக்கு உதவுங்கள் : அனைத்தையும் இழந்து தவிக்கும் சமூக சேவகர் 515 கணேசன்

Image
சுனாமி முதல் கேரள வெள்ள பாதிப்பு வரை பலரின் துயர் துடைத்த சமூக சேவகர் 515 கணேசனின் கண்ணீரை துடைக்க தற்போது ஆளில்லை. சுனாமி தொடங்கி கேரள மழை வெள்ளம் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடியோடி உதவி செய்த சமூக சேவகர் ஆலங்குடி 515 கணேசனையும் கஜா புயல் விட்டு வைக்கவில்லை. ஊரையே சூறையாடிய கஜா புயல் கணேசன் வீட்டை சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட ஊர் ஊராக அலைகிறார் கணேசன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கணேசன். 515 கணேசனை தெரியாதவர்கள் யாருமில்லை. ஆம்புலன்ஸ் தேவை என்றால் ஆலங்குடி சுற்றுவட்டார மக்களுக்கு இரண்டு எண்கள் நினைவுக்கு வரும். ஒன்று 108, மற்றொன்று 515. ஐம்பது ஆண்டுகளாக இரண்டு அம்பாசிடர் கார்கள் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை ‌இலவசமாகக் கொண்டு போய் சேர்த்தவர். அக்காலத்தில் பேய் பயத்தில் மறைந்தவர்களின் உடலைக் காரில் ஏற்ற மாட்டார்கள். கணேசன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை. தொடக்கத்தில் இரும்புக்கடையில் பணியாற்றிய ...

நடிகை ஃபிரீடா பின்டோ திருமணம்: காதலரை கரம் பிடிக்கிறார்!

Image
நடிகை ஃபிரீடா பின்டோ தனது காதலரை அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். ’ஸ்லம்டாக் மில்லினர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்பையைச் சேர்ந்த ஃபிரீடா பின்டோ. இந்தப் படத்தை அடுத்து ஹாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது ’மோக்லி: லெஜண்ட் ஆப் த ஜங்கிள்’, ’நீடில் இன் எ டைம்ஸ்டேக்’ ஆகிய படங்களில் நடித் து வருகிறார். ஆங்கில தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்கிறார். இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் ரோஹன் அன்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரை பிரிந்தார் ஃபீரிடா. இதையடுத்து ’ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் நடித்த தேவ் படேலை அவர் காதலித்து வந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, அவர் சாகசப் புகைப்படக் கலைஞரான கோரி டிரான் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாகச் சென்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை பார்க்கச் சென்ற இவர்க ள், ஸ்டேடியத்தில் முத்தமிட்டுக் கொண்ட காட்சிகள் பரபரப...

மீ டூ விவகாரம்: நடிகர் மோகன்லாலை சாடிய ரேவதி!

Image
மீ டூ விவகாரத்தை ஃபேஷன் என்று குறிப்பிட்ட நடிகர் மோகன்லாலை, நடிகை ரேவதி சாடியுள்ளார். சினிமா துறையில் மீ டு புகார்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன. நடிகர் நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார் நடிகை ஒருவர். இதையடுத்து அவர்கள் மீது போலீசில் புகாரும் கொடுத்தார் அந்த நடிகை. இதையடுத்து இந்தியில் நடிகை கங்கனா ரனவ்த் குயின் இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். மேலும் சில இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தமிழில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்தார். இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை, நடிகை அமலா பால் புகார் கூறினர். லீனா மீது சுசிகணேசன் வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகை ஸ்ருதிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து பாலியல் புகார் கூறப்பட்டு வருவது பற்றி, மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லாலிடம் கேட்டபோது, ‘இதை ஓர் இயக்கமாகக் கருதமுடியாது. இது ஒரு ஃபேஷன் ட...

நடிகர் ஷாரூக் கான் முகத்தில் மை தெளிப்போம்: ஒடிசா அமைப்பு திடீர் மிரட்டல்!

Image
ஒடிசாவுக்கு வரும் நடிகர் ஷாரூக் கானின் முகத்தில் மையைத் தெளிப்போம் என்று அங்குள்ள கலிங்க சேனா என்ற அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஷாரூக் கான், கரீனா கபூர் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான படம், ‘அசோகா’. இந்தப் படத்தில் அஜீத் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந் தார். சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் ஒடிசாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடந்ததால், அங்கு படம் திரையிடப்படவில்லை. ’அசோகா’ வெளியாகி 17 வருடம் ஆன நிலையில், இப்போது புது பிரச்னை கிளம்பி இருக்கிறது. அந்த படத்தில் கலிங்கப் போரை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் இதன் மூலம் ஒடிசா மக்களின் உணர்வுகளை பாதித்துவிட்டதாகவும் கலிங்க சேனா என்ற அமைப்பு புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக இதன் தலைவர் ஹேமந்த ராத் கடந்த 1 ஆம் தேதி போலீசில் புகாரும் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் 27 ஆம் தேதி ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இதை காண வருமாறு நடிகர் ஷாரூக் கானுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று அவர் விளையாட்டைப் பா...

“ரஜினி நலமாக உள்ளார்” - செய்தி தொடர்பாளர் விளக்கம்

ரஜினிகாந்த் நலமாக உள்ளார், அவரது உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளோடு அடுத்த வாரம் வெளியாக உள்ளது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறகுறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தம்முடைய ரசிகர்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை மேற்கொள்ள உள்ளதாக ரஜினி அறிவித்து இருந்தார். இந்நிலையில், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தது. இதனையடுத்து, ரஜினிகாந்த் நலமாக உள்ளார்; அவரது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்கள் தவறானவை என அவரது செய்தி தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத...