ஹாலிவுட் இயக்குனர் பெர்னார்டோ காலமானார்!

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இயக்குனர் பெர்னார்டோ பெர்டோலுஸி நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

தி கன்பாமிஸ்ட், லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ், த லாஸ்ட் எம்பரர், லிட்டில் புத்தா, த ட்ரீமர்ஸ், மீ அண்ட் யு உட்பட பல புகழ்பெற்ற படங்க ளை இயக்கியவர் இத்தாலியைச் சேர்ந்த பெர்னார்டோ பெர்டோலுஸி. ’த லாஸ்ட் எம்பரர்’ படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெற்றவர்.

சீனாவின் கடைசி ஆட்சியாளர் பு யி-யின் சுயசரிதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் விருதின் அனைத்து பிரிவுகளுக்கும் இந்தப் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியில் சிறந்த படம், சிறந்த இயக்கம் உட்பட 9 விருதுகளை வென்றது.

இதன் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற முதல் மற்றும் ஒரே இத்தாலிய இயக்குனர் என்ற பெயரை பெர்னார்டோ பெற்றார். கேன்சரால் பாதிக்கப் பட்டிருந்த இவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

ஐரோப்பிய மற்றும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வந்த இவர் காலமானதை இவரது செய்தி தொடர்பாளர் ஃபிளாவியா ஷியாவி உறுதிப் படுத்தியுள்ளார்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்