இந்த படத்தில் நான் நடித்தது தவறு..! - நடிகை நயன்தாரா வெளியிட்ட உண்மை..!

மாயா, அறம், கோலமாவு கோகிலா என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, தமிழ் பட உலகின் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்து கொண்டிருக்கிறார். 

அவர், படத்தில் நடிப்பதற்கு முன், தன்னுடைய கதாபாத்திரம் படத்தில் எப்படி வரும்; அது ரசிகர்கள் வரவேற்பைப் பெறுமா என்பது குறித்தெல்லாம், ஆழமாகக் கேட்டுக் கொண்ட பின் தான் நடிக்கிறார். 

இதனாலேயே, அவருடைய படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகின்றன. இந்நிலையில், தான் நடித்தவற்றில் எனக்கு பிடிக்காத கேரக்டர் என்று ஒன்று உண்டு என கூறி பேட்டியளித்திருக்கிறார். 

பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: கஜினி படத்தில் நடிப்பதற்கு முன்னும், படத்தின் மொத்த கதையையும் கேட்டுத்தான் நான் நடித்தேன். இருந்தாலும், அதில் வரும் சித்ரா கேரக்டரில் நான் நடித்திருக்கக் கூடாது. அந்த கேர்க்டரே எனக்கு பிடிக்காத ஒன்றாகி விட்டது. 

படத்தின் கதையைச் சொன்ன போது, அந்த கேரக்டர் எப்படி இருக்கும் என்று சொன்னார்களோ, அதன்படி, அந்த கேரக்டரை படமாக்கவில்லை. படமாக்கும்போது, வேறுவிதமாக எடுத்து விட்டனர். அதனால், அந்த கேரக்டரே படத்தில் எடுபடாமல் போய் விட்டது. இவ்வாறு நடிகை நயன் தாரா கூறியிருக்கிறார்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்