தன்னை ஆபாசமாக விமர்சித்த ரசிகருக்கு ஓவியா கொடுத்த மிக மோசமான பதில்..!
சமூகவலைதளத்தில் தன்னை ஆபாசமாக விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு நடிகை ஓவியா பதிலடி கொடுத்துள்ளார்.
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஓவியா, கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியானது. அந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் நடிகை ஓவியா தனக்கான வழியில் பயணிப்பேன் என்று மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வருகிறார்.
சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தனது 28-வது பிறந்தநாளை நேற்று ஓவியா கொண்டாடினார். இதையடுத்து சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையேயும் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் ஓவியாவை "ங்கோத்தா" ஆபாசமாக விமர்சித்தார்.
அதற்கு பதிலளித்த ஓவியா, அந்த ரசிகர் கூறிய அதேவார்த்தையை "ங்கோத்தா உங்கம்மா" என அவரது தாயுடன் சம்பந்தப்படுத்தி பதில் பதிவிட்டார்.
ஓவியாவின் துணிச்சலான இந்த நடவடிக்கைக்கு ஒருசிலர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் ஒருசிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
