மேலை நாடுகளில் நடந்த்தபடும் WWE போட்டிகள் உலகம் முழுதும் பிரபலம். இந்த போட்டிகளில் அடித்து கொள்ளும் வீரர்கள் உண்மையில் அடித்துக்கொள்வதில்லை வெறும் பாவலா மட்டுமே காட்டுகிறார்கள் என்பது தான் உண்மை. ஆனாலும், இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் வட்டம் மிகப்பெரியது.
இதில் பிரபலமான ஒருவர் தான் ஜான் சீனா. இவர், WWE மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், முழு நேர கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் ஜான் சீனா. எந்த படத்தில் என்று கேட்கிறீர்களா..?
உலகப்புகழ்பெற்ற திரைப்பட சீரிசான ஃபாஸ்ட் அண்ட ஃப்யூரியஸ் படத்தின் ஒன்பதாவது சீரியஸில் ஒரு ஹீரோவாக நடிக்கவுள்ளார் ஜான் சீனா. இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.



