யம்மாடியோவ்..! - உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன நடிகர் ஜெயராம்..! - இதோ புகைப்படம்
மலையாள நடிகர் ஜெயராம், தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார். த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம் ஜோடியாக, தபு நடிக்கிறார்.
இந்தப் படத்துக்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார் ஜெயராம்.இது குறித்து அவர் பேசிகையில், அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக உடல் எடையை குறைக்கச் சொன்னார்கள்.
அதனால், மிகவுல் கடுமையாக உடற்பயிற்சி செய்து 2 மாதத்தில் 12 கிலோ குறைத்திருக்கிறேன். இது எனக்கு 2 வது தெலுங்கு படம். இதில் என் கேரக்டர் பற்றி சொல்ல மாட்டேன். எனக்கு ஜோடியாக நடிகை தபு நடிக்கிறார்.
உடல் எடை குறைத்த பின் நான் என்னை மிகவும் உற்சாகமாக உணருகிறேன் என்றார்.இதோ அந்த புகைப்படம்,

