தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, திருமணம் செய்த பின்னர், கேரக்டர் நடிகையாக மாறிவிட்டார். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
தற்போது தனுஷின் பட்டாஸ், துல்கர்சல்மானின் வான் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருபவர், தற்போது ஒரு தமிழ்ப்படத்தில் ஹன்சிகாவின் மாமியார் வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதற்காக சற்று முதிர்ச்சியான கெட்டப்பிலும் அவர் தோன்றுகிறாராம். நடிகை ஹ்னஷிகாவுகும் சினேகாவுக்கும் 10 வயது தான் வித்தியாசம். ஆனால்,ஹன்ஷிக்காவுக்கு மாமியாராக சினேகா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
