கடாரம் கொண்டான் - கடுப்பான நடிகர் விக்ரம்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டநேஷனல்' நிறுவனம் 'டிரைடன்ட் ஆர்ட்ஸ்' என்ற விநியோக நிறுவனத்துக்கு பர்ஸ்ட்காப்பி அடிப்படையில் 'கடாரம் கொண்டான்' படத்தைத் தயாரித்து கொடுத்தது.
நடிகர் கமல் மற்றும் நடிகை த்ரிஷா கூட்டணியில் உருவான 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, அக்ஷரா ஹாசன், நடிகர் நாசர் மகன் அபி ஹாசன் இளம் காதலர்களாக நடித்துள்ளனர்.
மேலும், மலையாள நடிகை லெனா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று இப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் 'கடாரம் கொண்டான்' படத்திற்கு பேசியபடி முழுத்தொகையையும் 'டிரைடன்ட் ஆர்ட்ஸ்' ரவி என்பவர் படத்தைத் தயாரித்த கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை.
அதனால் விக்ரமுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. ஆனாலும், படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டார். சம்பள பாக்கி வராதரால் கடுப்பான விக்ரம் தன்னுடைய சொந்த செலவில் 'கடாரம் கொண்டான்' படத்துக்கான புரமோஷனை மேற்கொண்டு வருகிறார்.
