பிகில் படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை - பிகில் படக்குழு பிரஷர் கொடுக்கவும் இல்லை - முன்னணி இயக்குனர் விளக்கம்..!


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தன்னுடன் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார் விஜய்.தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் 24-ம் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அக்டோபர் 24-ம் தேதி வியாழக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக வரும் 3 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள "கென்னடி கிளப்" என்ற படமும் விளையாட்டை மையப்படுத்திய கதை தான் என்று கூறுகிறார்கள். இந்த படத்திற்கும் பிகில் படத்திற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. 

இரண்டு படங்களும் எமோஷனல் கலந்த விளையாட்டு அரசியலை கூறும் படங்கள் தான் என்ற பேச்சு இருந்து வருகின்றது. படம் வெளியான பிறகும் இரண்டு படங்களுக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடியுங்கள் என்று ரசிகர்கள் கேட்பார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

ஆனால், அவற்றை முற்றிலுமாக மறுத்துள்ளார் "கென்னடி கிளப்" படத்தின் இயக்குனர் சுசீந்தரன். இரண்டு படங்களும் ஒரே கதை என்பதால் பிகில் படக்குழு எனக்கு பிரஷர் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அப்படி யாரும் இதுவரை என்னை அணுகி அழுத்தம் கொடுக்கவில்லை. 

இரண்டு படங்களும் எமோஷன்கள் கலந்த விளையாட்டை அடிப்பையாக கொண்ட படங்கள் என்பது தான் இரண்டு படங்களுக்கு இருக்கும் அதிகபட்ச தொடர்பு என்கிறார் சுசீந்திரன். இந்த படம் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22)-ம் தேதி வெளியாகவுள்ளது.
Previous Post Next Post
--Advertisement--