நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது. இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசுகின்றனர்.
நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி இருக்கிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார்.
அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை” என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.
டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், வழக்கமான திருமணங்கள் போல நிலத்தில் இல்லாமல் நீரில் மிதக்கும் கப்பலில் திருமணம் நடக்கவுள்ளது என்பது உபரி தகவல். ஏதாவது, ஒரு க்ரூஸ் ரக கப்பலில் திருமணமனத்தை நடத்த முடிவு செய்துள்ளதாம் இந்த நட்சத்திர ஜோடி.
விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் முன்னணி தமிழ் நடிகர்கள் பங்கேற்பார்கள் என்று கூறுகிறார்கள்.