நடிகர் விஜய் இவ்வளவு மோசமானவரா..?? - நடிகர் ராதாரவி கூறிய பகீர் தகவல் - விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி..!


விஜய்யின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள் பலர். அதில் ஒருவர் பிரபல நடிகர் ராதா ரவி. விஜய் குழந்தையாக இருக்கும்போதே அவரின் குடும்பத்துடன் இன்று வரை நெருக்கமாக பழகி வருபவர். 

விஜய்யை விஜிமா என செல்லமாக எப்போதும் அழைப்பவர். அண்மையில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் மிகவும் மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், என் பேரன் விஜய்யின் தீவிர ரசிகர். அவர் விஜய்யை பார்க்கவேண்டும் என கூறினான். அதனால், ஒரு நாள் குடும்பத்துடன் அழைத்துச்சென்றேன். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இது எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. 


சமீபத்தில், சர்கார் படத்தில் விஜயுடன் நடித்திருந்தேன். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். ஆனால், மேடையில் மயக்கமாகி கிழே விழுந்து உட்கார்ந்துவிட்டேன். அப்போது, நடிகர் விஜய்யும் ஓடிவந்து என்னை தூக்கிவிட்டார். 


பிறகு ஒரு நாள் விஜய்-யை நேரில் சந்தித்து நன்றி சொல்ல அனுமதி கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், விஜய்யின் உதவியாளர் போனை எடுத்து அதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சம்மதம் சொன்ன விதம் தான் ராதாரவியை மனமுடைய செய்திருக்கிறது.

அவர் பேசிய வார்த்தைக்குப் பிறகு ராதாரவி விஜையை சந்திக்க போகவே இல்லையாம். ”வாங்க, ஆனால் அன்று போல கூட்டத்தை கூட்டிட்டு வந்துடாதீங்க” என்று விஜயின் உதவியாளர் ராதாரவியிடம் சொல்லியிருக்கிறார்.

எட்டு வருடத்திற்கு முன்பு ராதாரவி அழைத்து சென்றது அவரது குடும்பத்தை, அவர் குடும்பத்தை கூட்டம் என்று விஜயின் உதவியாளர் அநாகரீகமாக பேசியதால் மனமுடைந்து போயுள்ளார் ராதாரவி, அன்று முதல் விஜய் வீட்டு பக்கமே போவதில்லையாம்.

இந்தvவிஷயம் விஜய்க்கு தெரியாமல் இருந்திருக்குமா..? அப்படி தெரிந்தால்தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடித்து வரும் பழம் பெரும் நடிகரான ராதாரவிக்கு தன் உதவியாளரால் நேர்ந்த இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு நடிகர் விஜய் மோசமானவரா..?. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என்ற எந்த விஷயத்தையும் ராதாரவி பதிவு செய்யவில்லை.

இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போயுள்ளனர். நிச்சயம், இந்த விஷயம் தளபதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே பலரும்nநம்புகிறார்கள். தெரிந்திருந்தால் நிச்சயம் ராதாரவியிடம் விஜய் வருத்தம் தெரிவித்திருப்பார் என்றும் கூறுகிறார்கள். இப்போது தான் இந்த விவகாரம் வெளி வந்துள்ள நிலையில் நிச்சயம் விஜய் ராதா ரவியை சந்திப்பார் என்றே தெரிகின்றது.
Previous Post Next Post
--Advertisement--