காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள் பசங்களின் வயித்தெரிச்சலை கிளப்பிய நயன்தாரா..!


நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தான் தயாரிக்கிறார். 

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 

விக்னேஷ் சிவன் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் என்ன போஸ்ட் செய்தாலும் "அன்பான இயக்குநரே எங்கள் தலைவியை எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள்..?" என்று ரசிகர்கள் கேட்பார்கள். 

நயன்தாரா பாவம், காதலோடு விட்டுவிடாதீர்கள், அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஆனாலும்,நயன்தாரா விடுவதாக தெரியவில்லை. அடிக்கடி இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள் படங்களில் வயித்தெரிச்சலை கிளப்பி வருகிறார். 

அந்த வகையில், தற்போது தனது காதலனுக்கு மூக்கின் மேல் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் வயிற்றில் புகைச்சலை கிளப்பியுள்ளார் அம்மணி.