விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பட நடிகை - பரபரப்பு தகவல்
சினிமா நடிகைகள் விபசார வழக்கில் சிக்குவது இது முதன் முறை அல்ல, ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது சிக்கி விடுகிறார்கள். சமீபத்தில் தான சீரியல் நடிகைகளை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த நடிகை சங்கீதா மற்றும் சில நடிகைகளை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 23 வயதான பிரபல சினிமா துணை நடிகை ஜோதிலட்சுமி உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மதுரையில் விபச்சாரம் நடப்பதாக ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிரபல வலைத்தளமான லோகாண்டோ எனும் வெப்சைட் மூலம் இது நடைபெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வெப்சைட்டில் இருந்த குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் ரவி என்பவரிடம் வாடிக்கையாளர் போல் போலீஸ்காரர் பழனி குமார் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
அவரிடம் பேசிய விபச்சாரா ப்ரோக்கரான ரவி ஒரு மணி நேரத்திற்கு 1500 ரூபாய் என்றும் மூன்று பேர் இருக்கிறார்கள் அவர்களில் யார் உங்களுக்கு தேவையோ பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், முனிசாலையில் உள்ள தனி வீட்டிற்கு அழைத்து சென்று மூன்று பெண்களை காட்டியுள்ளார் ரவி. அதனை தொடர்ந்து விபச்சாரம் நடப்பதை உறுதிப்படுத்திய காவல்துறை அதிகாரிகள். உடனடியாக மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்க அங்கு விரைந்து வந்த மற்ற போலீசார் ப்ரோக்கர் ரவி மற்றும் மூன்று பெண்களை கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் தான் துணை நடிகை ஜோதிலட்சுமி. இவர் தேவராட்டம், சீமராஜா மற்றும் நாடோடிகள் 2 போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
சென்னையில் வசிக்கும் இவர், மதுரைக்கு அவ்வப்போது அழைப்பு என்றால் மட்டும் வருவாராம் மற்றும் முழு நேரம் சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

