ஹீரோயினாக அறிமுகமாகும் இவர், யாருடைய மகள் என்று தெரிகின்றதா..?
சினிமா என்ற கனவுலகத்தில் நுழைவது என்பது சாமான்ய மக்களுக்கு அவ்வளவு எளிமையான காரியமல்ல. ஆனால், சினிமா நடிகர்,நடிகைகளின் வாரிசுகளுக்கு ஈஸியான விஷயம்.
அந்த வகையில் சமீபத்திய வரவு பிரபல நடிகை கல்பனா-வின் மகள் ஸ்ரீமயி. நடிகை கல்பனா இயக்குனர் பாக்யராஜின் சின்ன வீடு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கல்பனா.
தொடர்ந்து, திருமதி ஒரு வெகுமதி, சிந்து நதிப்பூ, சதி லீலாவதி, பம்மல்
கே.சம்பந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். ஏராளமான மலையாள, தெலுங்கு
படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் நடிகை கல்பனா.அதனை தொடர்ந்து அவரது மகளான ஸ்ரீமயி இப்போது சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.
இயக்குனர் மகாரூப் முத்து இயக்கும் மலையாள படத்தில் அனார்கலி மரக்கார், ஹரிகிருஷ்ணன்,
சுதீஷ், இர்ஷத், மேகா மற்றும் பலர் நடிக்கின்றனர். அடுத்த மாதம் ஷூட்டிங்
தொடங்குகிறது.
16 வயது ஆகும் ஸ்ரீமயி சினிமாவுக்காக தனது பெயரை ஸ்ரீசங்க்யா (Sreesangya) என்று மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார்.

