நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது..? - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை அனு இம்மானுவேல் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார் இவர் மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். 

பின்பு தமிழில் முதன்முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.துப்பறிவாளன் திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் பட வாய்ப்பு அமையாததால் பின்பு தெலுங்கு பக்கம் சென்றார்.

அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.கேரளாவில் பிறந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். 

தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படும் நடிகைகளில் இவரும் ஒருவர் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. 

நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்த நடிக்க இருக்கிறாராம்.மேலும்,குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது கவர்ச்சி பக்கமும் திரும்பியுள்ளார். 


அதனை அறிவிக்கும் வகையில், கேரள மாநிலம் அலப்பி பகுதியில் படகில் படுத்தபடி படு சூடான போஸ் கொடுத்து இளசுகளின் பல்ஸை பதம் பார்த்துள்ளார் அனு இம்மானுவேல்.