உடல் பாகங்களுக்கு இன்சுரன்ஸ் போட்டு வைத்துள்ள பிரபல நடிகர் நடிகைகள் - இதை கூடவா இன்சூர் பண்ணுவாங்க..!?


உலகஅளவில் உள்ள பிரபலங்கள் தங்களுடைய உடல் பாகங்களை இன்சூர் செய்வது நடைமுறையில் இருந்து வருகின்றது. இதற்காக,வருடா வருடம் பெரிய தொகையை செலவு செய்கிறார்கள்.இந்த பழக்கம் இந்திய நடிகர்களையும் விட்டு வைக்க வில்லை.

ஆம், முன்னணியில் இருக்கும் பல நடிகர்கள்மற்றும் நடிகைகள் தங்களுடைய உடல் பாகங்களுக்கு இன்சுரன்ஸ் போட்டு வைத்துள்ளார்கள். அதற்கு ஏதேனும் குறை ஏற்படும் போது அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் அதற்கு ஆகும் செலவை அவர்களுக்கு வழங்கும் என்பது கூடுதல் தகவல்.

அப்படி என் விஷயங்களை நடிகர்கள் இன்சுரன்ஸ் (Insurance) செய்து வைத்துள்ளார்கள் வாங்க பாப்போம், 

1. அமிதாப் பச்சன்

இவர் தனது குரலை இன்சூர் செய்து வைத்துள்ளார். இவர் இறுதி காலம் வரை இவரது குரலுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டாலோ, பாதிப்பு ஏற்பட்டாலோ இன்சுரன்ஸ் நிறுவனம் மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ளும். இதற்காக, வருடா வருடம் லட்சகணக்கில் இன்சுரன்ஸ் தொகை கட்டுகிறார்.

2.ரஜினிகாந்த்

அமிதாப் பச்சானின் நெருங்கிய நண்பரான ரஜினி அவரை போலவே தன்னுடைய குரலுக்கும் இன்சுரன்ஸ் போட்டு வைத்துள்ளார். இதற்காக, பெருமளவு தொகையை செலவு செய்யும் அவர் இன்னும் ஒரு படி மேலே போய் தன்னுடைய குரலுக்கு காப்பி ரைட்ஸ்-ம் வாங்கி வைத்துள்ளார். அவருடைய அனுமதி இல்லாமல் அவருடைய குரலை மிமிக்ரி செய்து பயன்படுத்தினால் வழக்கு பாயும்.

ஹா..ஹா...ஹா... ஈ..து... எப்டி இருக்கு....?

3.பிரியங்கா சோப்ரா

இதை கேட்டால் உங்களுக்கே சிரிப்பு தான் வரும். ஆம், இவர் தன்னுடைய சிரிப்பு சத்தத்தை இன்சுரன்ஸ் செய்து வைத்துள்ளார்.

4.லதா மங்கேஷ்கர்

பாலிவுட்டின் சிறந்த பின்னணி பாடகியான இவர் பற்றி ஷாக் ஆவதற்கு ஒன்றும் இல்லை தன்னுடைய குரலை தான் இன்சுரன்ஸ் செய்து வைத்துள்ளார்.

5.ஜான் அப்ரஹாம்

இவர் கதையை கேட்டால் இதற்கெல்லாமா இன்சுரன்ஸ் போடுவாய்ங்க என்று தான் தோன்றும். ஆம், இவர் தனது பின்னழகை இன்சுரன்ஸ் செய்து வைத்துள்ளார்.

6.மல்லிகா செராவத் 

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை. ஒஸ்தி படத்தில் கலாசலா என ஒரு கலக்கு கலக்கியவர். இவர் தனுடைய உடல் பாகங்கள் அனைத்துக்கும் இன்சுரன்ஸ் போட்டு வைத்துள்ளார்.

7.ராக்கி ஷவந்த்


பாலிவுட்டின் சர்ச்சை நடிகை. இவர் தனது, மார்பு மற்றும் பின்னழகை இன்சுரன்ஸ் செய்து வைத்துள்ளார்.