வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு. சமீபத்தில், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதற்கு என்னை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். அதன் பிறகு சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து, தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில், '#MeToo புகார் கூறிய பிறகு தனக்கு நிறைய பட வாய்ப்பு மறுக்கப்பட்டது என கூறியுள்ளார். மேலும், 'என்னை சர்ச்சை நாயகியாக பார்ப்பதை கைவிட வேண்டும் என்றும், சினிமாவில் இந்த நிலைமை மாற வேண்டும் என்றும்' அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
