சந்திரமுகி 2 கதை ரெடி - ஆனால், ரஜினி ஹீரோ இல்லை - இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ..!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. அந்த படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை எழுதி முடிந்துவிட்டதாக இயக்குனர் பி.வாசு தற்போது தெரிவித்துள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனம் அதை தயாரிக்கவுள்ளது என கூறியுள்ள அவர், அதில் ஹீரோவாக முன்னணி நடிகர் நடிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அவர் ரஜினியின் பெயரை குறிப்பிடவில்லை. அதனால் அவர் சந்திரமுகி 2ல் நடிக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது. இந்நிலையில்,தற்போது கிடைத்த புதிய தகவல் என்னவென்றால் சந்திரமுகி 2-வில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள்.
சமீபத்தில் வெளியான சிவலிங்கா படத்தில் பி.வாசுவும், நடிகர் ராகவா லாரன்ஸும் கூட்டணி அமைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
