"கண்டிப்பா இதை டெலிகாஸ்ட் பண்ண மாட்டங்க" - விகடன் விருதை போட்டுதாக்கிய நடிகர் பார்த்திபன்..!


சமீபகாலமாக சினிமாவில் விருது பெரும் தகுதியுடையவர்களுக்கு விருது என்ற நிலை மாறி இப்போது விருது விழாக்களுக்கு வரும் நடிகர், நடிகைகளுக்கு விருது என்ற நிலை உருவாகி விட்டது என்பது உண்மை.

இதனால், உண்மையானபடைப்பாளிகள் மனம் புண்படும் என்பதையாரும் யோசிப்பது கூட கிடையாது. விருது விழாவில் விருது வழங்குவதுஎந்த அடிப்படையில் என்பது மூடுபனியாகவே உள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருதுகள் விழாவில் நடிகர் பார்த்திபனின் ஒத்தசெருப்பு சைஸ் 7 படத்திற்கு விருது எதுவும் வழங்கப்படவில்லை. இது திரைப்பிரபலங்கள் மத்தியில் கேள்வியை எழுப்பவே, உடனே ஸ்பெஷல் மென்ஷன் என்று ஒரு விருதை பார்த்திபனுக்கு வழங்கினார்கள்.

இதுகுறித்து மேடையில் தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொண்டு பேசிய பார்த்திபனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.