தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், என்னுடைய அடுத்த படங்களில் ஒன்று சந்திரமுகி 2.
நான் இந்தப் படத்தில் தலைவரின் அனுமதியுடனும், ஆசிர்வாதத்துடனும் நடிக்கிறேன் என்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இயக்குநர் பி.வாசு இயக்கும் இந்த படத்தை என்னுடைய லக்கி ப்ரொட்யூசர் கலாநிதிமாறன் தயாரிப்பதாகவும் கூறியுள்ளார் லாரன்ஸ்.
இந்த படம் 150 கோடி ரூபாயில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ளது என முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன.
Tags
Chandramuki 2