இணையத்தில் தீயாய் பரவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் - ஷாக் ஆன நடிகை அனுப்பமா..!


தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும், அனுபமா பரமேஸ்வரனின் சமூக வலைதள பக்கம், 'ஹேக்' செய்யப்பட்டு, அதில், 'மார்பிங்' செய்யப்பட்ட மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகின. 

இணையத்தில் நடிகைகள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சனைகளில் ஒன்று இது. நடிகைகளின் தலையை மட்டும் மென்பொருட்கள் துணை கொண்டு வெட்டி எடுத்து ஆடையின்றி இருக்கும் பெண்களின் உடலில் ஒட்ட வைத்து மார்ஃபிங் செய்து இனையத்தி வெளியிடும் விஷமக் கும்பல் இந்த முறை அனுப்பமா பரவேமேஸ்வரனை குறி வைத்துள்ளது.

தன்னுடைய மோசமான புகைப்படத்தை பார்த்த அனுப்பமா பரமேஸ்வரன் அதிர்ச்சியாகி போனார்.இதையடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து, அவர் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பே இப்படி நடந்தது. அப்போதே புகார் அளிக்காதது தான், நான் செய்த தவறு,'' என்றார்.