"மோசமா டார்ச்சர் பண்றாங்க.. ஹெல்ப் பண்ணுங்க.. அர்ஜென்ட் ப்ளீஸ்" - கதறும் பிக்பாஸ் டேனியல் - என்ன காரணம்..?


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார என்ற படத்தில் "ஃப்ரண்டே.. ஃபீல் ஆயிட்டாப்ள.. ஒரு ஆஃப் சாப்ட்டா கூல் ஆயிடுவாப்ள.." என்ற ஒற்றை வசனம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர் நடிகர் டேனி.

இதனை தொடர்ந்து ரங்கூன், மரகத நாணயம் உள்பட பல தமிழ்ப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் டேனியல். இவரது முழு பெயர் டேனியல் ஆன்னி போப் என்பதாகும்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார். அந்தப் போட்டியில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு நேற்று தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் டேனி மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார். ஆனால், இந்தப் பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே தங்கள் குடும்பத்தை கார்ப்பரேஷன் அலுவல அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு புகார் ஒன்றையும் டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் டேக் செய்து வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், 'வளசரவாக்கம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தங்களுடைய குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்து வருவதாகவும், அவர்கள் மிகவும் மோசமாக தங்களிடம் நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும்' அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தப் பிரச்சினையில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் உடனடியாக உதவி தேவை என்றும் அவர் கோரியுள்ளார். கொரோனா சோதனை நெருக்கடியால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதா..? அல்லது, வேறு ஏதேனும் காரணமா..? என்பது பற்றி அந்தப் பதிவில் அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

"மோசமா டார்ச்சர் பண்றாங்க.. ஹெல்ப் பண்ணுங்க.. அர்ஜென்ட் ப்ளீஸ்" - கதறும் பிக்பாஸ் டேனியல் - என்ன காரணம்..? "மோசமா டார்ச்சர் பண்றாங்க.. ஹெல்ப் பண்ணுங்க.. அர்ஜென்ட் ப்ளீஸ்" - கதறும் பிக்பாஸ் டேனியல் - என்ன காரணம்..? Reviewed by Tamizhakam on June 29, 2020 Rating: 5
Powered by Blogger.