அடப்பாவிங்களா..? - சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா..! - புலம்பும் ரசிகர்கள்..!


சீரியல் என்றாலே எப்போதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் திரைப்படங்களை விடவும் சீரியலை வைத்து தான் பல சேனல்கள் டி ஆர் பியில் தப்பி பிழைத்த வருகிறார்கள்.

அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்புடன் தான் பல சீரியல்களின் ஒவ்வொரு எபிசோடும் முடியும் என்பதால் சில குறிப்பிட்ட தொலைகாட்சிகள் வார நாட்கள் முழுதும் சீரியல்களாக ஒளிபரப்பி தள்ளுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் வார நாட்கள் முடிந்து இப்போது சனிக்கிழமையும் நாள் முழுதும் சீரியலை ஓட விடுகிறார்கள். அந்த விதத்தில் சீரியல் சிறுபட்ஜெட்டில் எடுப்பதால் இருக்கும் பொருட்களை வைத்து அப்படியே எடுத்துவிடுவார்கள். 

அவர்களுக்கு லாஜிக் எல்ல தேவையே இல்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நெத்தியில் சுடப்பட்டு ஒரு நாள் முழுவதும் ஊர் சுற்றிய ஹீரோயின் கதாப்பாத்திரம் எல்லாம் நாம் பார்த்து விட்டோம். 

அந்த வகையில் பெங்காலி சீரியல் ஒன்றில் பாத்திரம் தேய்க்கும் ஸ்கரப்பர் ஒன்றை வைத்து சிவாஜி படத்தில் ரஜினிக்கு உயிர் கொடுக்கும் காட்சி ஒரு காட்சி வந்துள்ளது. 

இதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அடப்பாவிங்களா..? சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா என்று வடிவேலு பாணியில் புலம்பி வருகிறார்கள்.


அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது.

அடப்பாவிங்களா..? - சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா..! - புலம்பும் ரசிகர்கள்..! அடப்பாவிங்களா..? - சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா..! - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 22, 2020 Rating: 5
Powered by Blogger.