"ஏணி வச்சாலும் எட்டாது.." - :இடுப்புல தூக்கி வச்சி கொஞ்சிடுவேன்.." - பிகில் அம்ரிதா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


நடிகை அம்ரிதா ஐயர், பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸ் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான 'படை வீரன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து, தெறி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

பின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பிகில்' படத்தில், கால்பந்து விளையாட்டு அணியின் கேப்டனாக நடித்திருந்தார்.இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அடுத்தடுத்து, பல படங்களில் நடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் அமிர்தா ஐயர், தற்போது சூப்பர் ஹிட் தமிழ் படத்தின் தமிழ் ரீமேக் ஒன்றில் நடிக்க தெலுங்கில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு, தமிழில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின், தெலுங்கு ரீமேக்கில் தான் நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கிஷோர் திருமலை இயக்கியுள்ளார், ராம் போத்தேனி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு 'ரெட்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அம்ரிதா ஐயர், நிவேதா பெத்துராஜ், மற்றும் மாளவிகா ஷர்மா ஆகிய மூன்று நடிகைகள், நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது.

கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது துளி மேக்கப் இல்லாமல் க்ளோஸ் அப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், பட வாய்ப்புக்காக அரைகுறையுமாக போட்டோகளை வெளியிடும் நடிகைகள் எங்கே.. மேக்கப் கூட போடாமல் போட்டோ போடும் நீங்க எங்க.. ஏணி வச்சாலும் எட்டாது என்றும், இடுப்புல தூக்கி வச்சி கொஞ்சிடுவேன் என்று கமெண்டி வருகிறார்கள்.

"ஏணி வச்சாலும் எட்டாது.." - :இடுப்புல தூக்கி வச்சி கொஞ்சிடுவேன்.." - பிகில் அம்ரிதா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "ஏணி வச்சாலும் எட்டாது.." - :இடுப்புல தூக்கி வச்சி கொஞ்சிடுவேன்.."  - பிகில் அம்ரிதா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.