கடையில் இருந்த விநாயகர் சிலைகளை உடைத்த இஸ்லாமிய பெண்மணி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!


சமீப காலமாக குறிபிட்ட மதவெறுப்பு பிரச்சாரங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் சொல்லவே தேவையில்லை. பகுத்தறிவு என்ற பெயரில் சிலர் செய்யும் அட்டூழியங்கள் எல்லை மீறி செல்கின்றது. 

இத்தனை நாட்களாக இதனை கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக மக்கள் கந்தசஷ்டி விவாகரத்தில் ஒன்றுசேர்ந்து நின்று சில கயவர்களை கம்பிக்குள் அடைத்துள்ளனர்.

ஆனால், இது தற்காலிகமான தீர்வே தவிர நிரந்தரமான தீர்விற்கு எல்லோருடைய மத நம்பிக்கைகளையும் மதிக்க கூடிய ஒருவர் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த விஷயத்தில் தெளிவான புரிதலுடன் இருக்கிறார்கள் என்று நம்மால் பார்க்க முடிகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள அரசியல் கட்சி மற்றும் அவர் முன்னெடுக்கவுள்ள ஆன்மீக அரசியல் மக்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளதை கண் கூடாக பார்க்க முடிகின்றது.

இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் அல்-ஜூஃபைர் என்ற இடத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருகின்றன.

அந்த சூப்பர் மார்கெட்டிற்கு வந்த இஸ்லாமிய பெண்மணி ஒருவர் அங்கிருந்த சிலைகளை கீழே தள்ளி விட்டு உடைத்தது மட்டுமல்லாமல் அந்த கடை ஊழியருக்கு மிரட்டல் விடுப்பது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக அங்கிருந்த இந்துக்கள் எடுத்த தீவிரமுயற்சியின் விளைவாக 54 வயது நிரம்பிய அந்த பெண்மணிக்கு பிற மத நம்பிக்கைகள் புண் படுத்துதல் மற்றும் பிற மத கடவுள்களின் புனிதத்தை கெடுத்தல் உள்ளிட்டப பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Gulf Daily News இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இணையத்தில் தீயாக பரவி வரும் அந்த வீடியோ இதோ,

கடையில் இருந்த விநாயகர் சிலைகளை உடைத்த இஸ்லாமிய பெண்மணி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! கடையில் இருந்த விநாயகர் சிலைகளை உடைத்த இஸ்லாமிய பெண்மணி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.