கடைசி நாள் படப்பிடிப்பில் கடும் தொல்லை கொடுத்தார் - தயாரிப்பாளர் மீது இளம் நடிகை பகீர் புகார்!


மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் மந்தனா கரீமி. ஈரான் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர், மான்டி என அன்பாக அழைக்கப்படுகிறார். இந்தியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 9’ சீசனில் பங்கேற்றதன் மூலமாக, பிரபலமானார். 
 
இதன்பிறகு, பாக் ஜான்னி, மெய்ன் ஆர் சார்லஸ், கியா கூல் ஹெய்ன் ஹம் 3 போன்ற படங்களில் மந்தனா நடித்துள்ளார். மந்தனா கரீமி, இரவு நேர கேளிக்கை விருந்துகளுக்குச் செல்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
 
ஷிவம் நாயர் இயக்கிய பாக் ஜானி என்ற படத்தில் நடித்துள்ள இவர், அடுத்து மெயின் அவுர் சார்லஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் மகேந்திர தாரிவால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் கூறியுள்ளார். 
 
இந்த படத்தில் நான் கமிட்டான நாள் முதல் பிரச்சனை தான். படத்தின் கடைசி நாள்படப்பிடிப்பு அன்று அவர் நான் இருந்த கேரவேனுக்கே வந்து, இங்கே கூடுதல் நேரம் இருக்க வேண்டும். ஏனென்றால் நான் தான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்று மிரட்டினார் என்று கூறினார் நடிகை மந்தனா. 
 
இதுகுறித்து தயாரிப்பாளர் தாரிவால் கூறும்போது, அதிக நேரம் இருக்க வேண்டும் என்றால் இன்னும் ரூ.2 லட்சம் வேண்டும் என்று மந்தனா கேட்டார். நான் மறுத்துவிட்டேன். 
 
அதன் பிறகு கொடுத்தும் விட்டேன். இதுதான் நடந்தது என்றும், இதனை என் மீது பாலியல் சீண்டல் புகார் ரேஞ்சுக்கு இழுத்துவிட்டு விட்டார் என்று கூறியுள்ளார். இந்த புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடைசி நாள் படப்பிடிப்பில் கடும் தொல்லை கொடுத்தார் - தயாரிப்பாளர் மீது இளம் நடிகை பகீர் புகார்! கடைசி நாள் படப்பிடிப்பில் கடும் தொல்லை கொடுத்தார் - தயாரிப்பாளர் மீது இளம் நடிகை பகீர் புகார்! Reviewed by Tamizhakam on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.