"ஜவுளி கடை பொம்மைன்னு நெனசிட்டோம்.." - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..!


சின்னத்திரை நடிகை கிருத்திகா 15 வருடங்களுக்கு முன்னர் ’மெட்டி ஒலி’ சீரியல் அருந்ததியாக நடிக்க ஆரம்பித்து, சன் டிவி-உடனான பயணம் இப்போது பாண்டவர் இல்லம் சீரியல் ரேவதி வரை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. 
 
சன் டிவியில் மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு, ’ஆடுகிறான் கண்ணன்’, ’முந்தானை முடிச்சு’, ’கணவருக்காக’, ’வம்சம்’, ’செல்லமே’ என்று இவர் நடித்த சீரியலின் பெயர்கள் நீண்டுக் கொண்டே போகிறது, என்றாலும் இவர் ரொம்ப ரொம்ப நல்ல பெண்ணாக நடித்தது ரம்யா கிருஷ்ணனுடனான வம்சம் சீரியலில் மட்டும்தான்.
 
சன் டிவியில் அப்போது நட்சத்திர கபடி என்று ஒரு ரியாலிட்டி கேம் ஷோ நடத்தினார்கள். இதில் வம்சம் அணியின் கேப்டனாக இருந்தவர் கிருத்திகா. கபடி கேம் ஷோவில் கோப்பையை வென்ற அணியும் கிருத்திகா அணிதான்.
 
ராடான் மீடியாவொர்க்ஸின் கீழ் ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த செல்லமே என்ற சீரியலில் கோமதியாக நடித்துள்ளார். கிருத்திகாவின் பங்கு சீரியலில் எதிர்மறையான பாத்திரமாகும். அவர் எதிர்மறையான பாத்திரத்தை முயற்சித்த முதல் முறையாகும். 
 
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருகிறார்கள். 
 
இந்நிலையில், சொக்க வைக்கும் கவர்ச்சி பார்வையை வீசியபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கிருத்திகா.
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், ஜவுளி கடை பொம்மை மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

"ஜவுளி கடை பொம்மைன்னு நெனசிட்டோம்.." - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! "ஜவுளி கடை பொம்மைன்னு நெனசிட்டோம்.." - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 24, 2020 Rating: 5
Powered by Blogger.