ஒல்லியாக வெல வெலன்னு இருந்த அட்லியா இது..? - உடல் எடை கூடி குண்டான அட்லி - வைரல் போட்டோ..!


ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அட்லி. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டதால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வைத்து படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 
 
அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அட்லி தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களில் மீண்டும் விஜய்யை வைத்து இயக்கி தமிழ் சினிமாவின் வசூல் இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். 
 
இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் விஜயின் வசூல் படங்களிலும் இடம் பிடித்தது குறிப்பிடதக்கது. 
 
தொடர்ந்து விஜய்யை வைத்து வெற்றி கொடுத்து வருவதால் விஜய் ரசிகர்கள் இப்போது கூட இவரை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர் பலமுறை மேடைகளில் எனக்கு விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் அதனாலதான் தொடர்ந்து அவரை வைத்து படம் இயக்கியதாக பெருமிதத்துடன் கூறியிருந்தார்.
 
தற்போது அட்லி எந்த ஒரு படத்தையும் இயக்காததால் தனது குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். இவரும் இவரது மனைவியும் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைபடத்தை அவரை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

 
ஒல்லிப்பிச்சானாக இருந்த அட்லி உடல் எடை கூடி கொளு கொளுவென மாறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் லாக் டவுன் எஃபெக்ட் என்று கூறி வருகிறார்கள்.

ஒல்லியாக வெல வெலன்னு இருந்த அட்லியா இது..? - உடல் எடை கூடி குண்டான அட்லி - வைரல் போட்டோ..! ஒல்லியாக வெல வெலன்னு இருந்த அட்லியா இது..? - உடல் எடை கூடி குண்டான அட்லி - வைரல் போட்டோ..! Reviewed by Tamizhakam on December 26, 2020 Rating: 5
Powered by Blogger.