"கசங்கிய சேலை - முகத்தில் மாஸ்க்.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் கீர்த்தி சுரேஷ், இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
மேலும் இவர் தெலுங்கு பக்கம் சென்று சில திரைப்படங்களில் நடித்து வந்தார், அந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் தெலுங்கு முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் காட்டுவதால் கீர்த்தி சுரேஷிற்கு மார்க்கெட் கொஞ்சம் குறைந்தது.
கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை என்றாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது, இவர் நடிகர் விஜயுடன் பைரவா மற்றும் சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கிறார்.
இந்நிலையில், வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் மலையாள படம் ஒன்றில் முதன் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள 'சாணிக் காகிதம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கருப்பு வெள்ளையில் உள்ள இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு நாற்காலியில் மாஸ்க் அணிந்து, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு... சாதாரண கசங்கிய சேலையில் இருப்பது போன்றும், உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருவது கீர்த்தி அணிந்துள்ள மாஸ்க்கில் இருந்தே தெரிகிறது.
"கசங்கிய சேலை - முகத்தில் மாஸ்க்.." - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
January 30, 2021
Rating:
