தல அஜீத், தளபதி விஜய் போல நடிகர் தனுஷ்-ற்கும் அடைமொழி - வச்சது யாருன்னு பாருங்க..!
தமிழ் சினிமாவில் கிட்ட தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு உய்ரந்துள்ள நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகராக விளங்கி வருகிறார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் தற்போது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார்.
அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் செல்வாரகவன் அளித்துள்ள பேட்டியில் "மற்ற நடிகர்களை போல தனுஷிற்கு நானே வருவேன் திரைப்படம் முதல் ஒரு அடைமொழி வைக்க முடிவு செய்துள்ளேன். ஆனால், அதற்கு தனுஷ் ஒத்துக்கொண்டால் மட்டும் தான் வைப்பேன்" என கூறியுள்ளார்.
தல அஜீத், தளபதி விஜய் போல நடிகர் தனுஷ்-ற்கும் அடைமொழி - வச்சது யாருன்னு பாருங்க..!
Reviewed by Tamizhakam
on
January 20, 2021
Rating:
