திருமணமாகி 19-வது நாளே விவாகரத்து செய்த பிரபல நடிகை - காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

 
பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'லைப் ஆப் ஜோசுட்டி' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் ரக்சனா நாராயணன்குட்டி. 
 
இவர்தான் 2015-ம் வருடம் தேசியவிருது பெற்ற 'அய்ன்' என்கிற மலையாளப்படத்தின் கதாநாயகியாகவும் நடித்தவர். கடந்த 2௦11 பிப்ரவரியில் இவருக்கும் அருண் சதாசிவன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.. 
 
பெரியோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான்.. ஆனால். திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என கோர்ட்டில் விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்தார் ரக்சனா. 
 
அதுபற்றி இதுநாள் வரை வெளிக்காட்டிக்கொள்ளாத ரச்சனா, தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அடிப்படையில் ரக்சனா நல்ல ஆங்கில புலமை பெற்றவர். 
 
 
அதனால் தான் வேலைபார்த்து வந்த ரேடியோ ஜாக்கி வேலையை விட்டுவிட்டு ஒரு ஆங்கிலப்பளியில் டீச்சராக வேலைக்கு சேர்ந்தாராம்.. அதுமட்டுமல்லாமல் நடனத்தில் தேர்ந்தவரான ரட்சனா ஒரு நாட்டிய பள்ளியையும் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்தாராம். 

 
ஆனால், திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர், தனக்கு கால் விலங்கு போட முயற்சிப்பதை அறிந்து, இவருக்கும் நமக்கும் செட்டாகாது என 19 நாட்கள் ஆன நிலையிலேயே விவாகரத்துக்கு அப்ளை செய்து, தற்போதும் விவாகரத்தும் பெற்றுவிட்டாராம்.  

இதனை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், கணவர் தானே கூறுகிறார். அவரிடம் விஷயத்தை எடுத்துகூறி அவருடைய சம்மதத்துடன் தன்னுடைய பணிகளை தொடங்கி இருக்கலாமே. 

திருமணம் ஆகி 19 நாளில் ஒருவரை ஒருவர் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று இப்படி விவாகரத்து வரை வந்தீர்கள்..? நிச்சயம் வேறு ஏதாவது வெளியில் சொல்ல முடியாத காரணம் என்றால் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று பதில் கூறியிருக்கலாம்.

ஆனால், இப்படிஒன்றுக்கும் உதவாத காரணத்தை சொல்வதுஉங்களைபின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்த எதுவாக அமைந்து விடும் என்று கூறி வருகிறார்கள்.

திருமணமாகி 19-வது நாளே விவாகரத்து செய்த பிரபல நடிகை - காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! திருமணமாகி 19-வது நாளே விவாகரத்து செய்த பிரபல நடிகை - காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on February 10, 2021 Rating: 5
Powered by Blogger.