"இந்த வயசுலயும் இப்படியா..?" - சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்...!

 
1994- ஆம் ஆண்டு பாக்யராஜின் 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர், அதன் பின்பு மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்தார். 
 
அதற்குப் பின்பு திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்டவர், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். 
 
தற்போது அரண்மனை கிளி சீரியலில் ஹீரோவுக்கு தாயாக நடித்து வருகிறார். இவரது நடிப்பு அந்த சீரியலில் மிகவும் பிரபலம்.சீரியலில் மட்டுமல்ல பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். 
 
‘திரைக்கதை மன்னர்’ இயக்குநர் பாக்யராஜி
ன் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் மூலமாகத் தமிழுக்கு நாயகியாக அறிமுகமானார் பிரகதி. அறிமுகப்படம் வெற்றிப்படமாகவே அமைந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. 
 
 
ஆகையால் சோர்வுடன் போராடிக் கொண்டிருந்திருக்கிறார்.இந்நிலையில் நடிகை பிரகதி மாடர்ன் உடையில் உடற்பயிற்சி செய்யும் தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 


 
இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அரண்மனை கிளி நடித்த பிரகதியா இது..? இந்த வயதிலும் இப்படி இருக்கிறாரே..? என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.