'இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இளம் நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்க சூர்யா ஹீரோவாக நடித்த இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 8 தோட்டாக்கள் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான சர்வம் தாளமயம் என்ற படத்தில் நடித்தார்.
தற்போது சூரரை போற்று மற்றும் தீதும் நன்றும் என இரண்டு படங்களில் நடித்துள்ளார்அம்மணி. சூரரை போற்று படத்தில் மாறன் என்ற கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்து இருப்பார்.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார்.
அவரது திறமையான தைரியமான நடிப்பு பலராலும் கொண்டாடப்பட்டது. அத்துடன் கவர்ச்சி ஏதுமில்லாமல் படத்தில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் போற்றத்தக்க விதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருப்பார்.
இந்த நிலையில் அவரது அழகை வர்ணித்து இணையதளத்தில் கவிதைகளும் குவியத் துவங்கின. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மழையை பொழிந்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் உங்களின் பார்வைக்காக இதோ.
Tags
Aparna Balamurali