கவர்ச்சி உடையில் "துப்பாக்கி" பட நடிகை தீப்தி நம்பியார் - வைரலாகும் க்யூட் பிக்ஸ்..!

 
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் தீப்தி. அதனை தொடர்ந்து, துள்ளி விளையாடு மற்றும் முருகதாஸின் துப்பாக்கி படத்திலும் நடித்திருந்தார். 
 
துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு முன்பாகவே 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டாளம்’ படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ரசிகர்களுக்கு மிகவும் அறியப்பட்டது எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் தான். 
 
ஜெய், அஞ்சலி, அனன்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே அமைந்தது. அந்த படத்தில் இவரை பார்த்துவிட்டு இவரை பலரும் யார் என்று தெரிந்த கொள்ள கூகுளை தொந்தரவு செய்தனர். 
 
 
மூக்கும், முழியுமாக பக்கத்து வீட்டு பெண் போல இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. கவர்ச்சியாக நடிப்பது குறித்து அவரிடம் கேட்ட போது காட்சிக்குத் தொடர்புடையதாக இருக்கும்போது கவர்ச்சி காட்டலாம். அதை நான் மறுக்கவும் இல்லை. 
 
 
அதேசமயம், காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவது என்று கேட்கிறார் நடிகை தீப்தி நம்பியார். எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு ‘உங்கள் விருப்பம் ‘ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
 
 
ஆனால், அந்த திரைப்படம் வெளியாகமலே போனது. பிறகு, யுகம் என்ற படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.

 
இந்நிலையில், இவருடைய சமீபத்தில் இவரது சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கவர்ச்சி உடையில் "துப்பாக்கி" பட நடிகை தீப்தி நம்பியார் - வைரலாகும் க்யூட் பிக்ஸ்..! கவர்ச்சி உடையில் "துப்பாக்கி" பட நடிகை தீப்தி நம்பியார் - வைரலாகும் க்யூட் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on February 17, 2021 Rating: 5
Powered by Blogger.