"இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படி கவர்ச்சி உடையா..?.." - "தெய்வமகள்" அண்ணியாரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
மக்களிடம் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான தொடர் ‘தெய்வமகள்’. 
 
சன் தொலைக்காட்சியில் சுமார் 3 வருடங்களாக ஒளிபரப்பான இந்த தொலைக்காட்சி தொடரில் கதையின் நாயகியாக, சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த வாணி போஜன், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாகி விட்டார். 
 
அவரது முதல் படமான ‘ஓ மை கடவுளே’ வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். சத்யா எந்த அளவுக்கு தெய்வமகள் சீரியலில் பேசப்பட்டாரோ அதே அளவுக்கு வில்லியாக காயத்ரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ரேகா கிருஷ்ணப்பாவும் அதிகமாக பேசப்பட்டார். 
 
கதையின் நாயகன் கிருஷ்ணாவுக்கு அண்ணி வேடத்தில் நடித்த இவரை, கிருஷ்ணா “அண்ணியார்..” என்று அழைப்பது டிரெண்டாகிவிட்டது. அதனால், நடிகை ரேகா கிருஷ்ணப்பாவை ரசிகர்களும் செல்லமாக “அண்ணியார்...”என்று தான் அழைப்பார்கள். 
 
 
‘தெய்வமகள்’ சீரியல்லுக்கு பிறகு ரேகா கிருஷ்ணப்பா, வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டவில்லை. அதே சமயம், சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
இந்த நிலையில், குட்டி டவுசர் மற்றும் டிரான்ஸ்பரண்ட் மேலாடை என கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ரேகா கிருஷ்ணப்பா அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சீரியலில் குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்கும் ரேகா கிருஷ்ணப்பாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்