"பைத்தியமா இவ.." - மீரா மிதுன் உச்ச கட்டம் - விளாசும் ரசிகர்கள்..!


பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இனி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி மீரா மிதுன் மும்பையில் செட்டிலானார். 
 
கோலிவுட்டில் தனக்கு எதிராக பெரிய சதி நடப்பதாக கூறினார்.விஜய், சூர்யா, ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோரை விமர்சித்து ட்வீட் போட்டார். ரஜினியை கன்னடர் என்று கூறினார். 
 
ஐஸ்வர்யா ராஜேஷும், த்ரிஷாவும் தன்னை காப்பியடிப்பதாக புகார் தெரிவித்தார். மேலும் நயன்தாராவை பற்றி தரக்குறைவாக ட்வீட் போட்டார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்லும் பெண் தான் இல்லை என்றும், தான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்ததாகவும் கூறினார். 
 
இந்நிலையில் சமூக வலைதளத்தில் லோஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவர் தன்னை காப்பியடித்து உடை அணிந்திருப்பதாக கூறி ட்வீட் செய்திருக்கிறார் மீரா மிதுன்.அந்த ட்வீட்டை பார்த்தவர்களோ, உங்களுக்கு முன்பே அந்த கருப்பு உடையை அணிந்தது தலைவி நயன்தாரா தான்.
 

நீங்கள் அவரை காப்பியடித்துவிட்டு லோஸ்லியாவை புகார் சொல்கிறீர்களா என்று கேட்டனர். இப்படி முன்னணி நடிகைகள் என்னுடைய ஸ்டைலை காப்பி அடிச்சுட்டாங்க என்று கூறி வரும் மீரா மிதுன் (எ) தமிழ்செல்வியை பார்த்த ரசிகர்கள் பைத்தியமா இவ என்று கலாய்த்து வருகிறார்கள்.

"பைத்தியமா இவ.." - மீரா மிதுன் உச்ச கட்டம் - விளாசும் ரசிகர்கள்..! "பைத்தியமா இவ.." - மீரா மிதுன் உச்ச கட்டம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 23, 2021 Rating: 5
Powered by Blogger.