"தனிமையில் அந்த பழக்கம் எனக்கு இருந்தது..." - வெளிப்படையாக கூறிய ஓவியா..!


அனிதாஉதீப் எனும் பெண் இயக்குநர் இயக்கத்தில், ஓவியா நடித்திருக்கும் படம் 90 எம்.எல். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்திருப்பதுடன், ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். 
 
படத்தில் ஓவியா இரட்டை அர்த்த வசனம் பேசி, அரைகுறை உடையுடன் மோசமான காட்சிகளில் நடித்திருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி திரைக்கு வந்தது இந்த திரைப்படம். 
 
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே ஓவியா மீது கடும் விமர்சனங்கள் குவிந்தன. படம் வெளியான பிறகு ஓவியாவின் இமேஜ் முழுதும் சுக்கு சுக்காக உடைந்து போனது. 
 
அதன் பிறகு ஏற்கனவே கமிட் ஆன படங்களில் இருந்து கழட்டி விடப்பட்டார் அம்மணி. பிக்பாஸ் மூலம் பெரும் புகழ் பெற்ற இவர் அவராகவே தன்னுடைய தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டார்.
 
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஓவியா கூறியிருப்பதாவது, இந்தப்படத்தில் மாடர்னாக நடித்திருந்தேன். ( மாடர்ன் பொண்ணுன்னா அரைகுறையா ட்ரெஸ் போட்டுகிட்டு தண்ணி, தம்முன்னு சுத்துறதா மேடம்..???) 
 
பெண்கள் என்றாலே அழுது கொண்டு சோக வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? நான் ஆடையை துறந்து நடிக்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதைக் கொடுப்பது என் கடமை. உடை அணிவது பெண்களின் சுதந்திரம். 
 
அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இது, ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். 
 
கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ப நடிப்பதில் தப்பு இல்லை. படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் என்ன கேட்டதோ, அதைத்தான் செய்து இருக்கிறேன். 
 

தனிமையில் அந்த பழக்கம்..

 
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பிருந்தே எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. தனிமையில் இருக்கும் போது புகை பிடிப்பதை பழக்கமாக கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், புகை பிடித்தால் என்ன ஆகும் என்பதைப் பார்த்ததில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். 
 
ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ‘90 எம்.எல்.’ படத்தில் ஓரளவு நிறைவேற்றி விட்டேன். படத்தில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன்.
 
சினிமா, பொழுதுபோக்கு சாதனம். அதில், பொழுதுபோக்கு அம்சங்களைக் காட்டுவதில் தப்பு இல்லை. எனக்கென்று ரசிகர்கள் ஒரு இடம் வைத்து இருக்கிறார்கள். 
 
என்னை நம்பி வருபவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். இது, ஜாலியான படம். பெண்கள் யாருக்கும் பயப்படக்கூடாது என்ற கருத்து இந்தப் படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஓவியா கூறியுள்ளார்.

"தனிமையில் அந்த பழக்கம் எனக்கு இருந்தது..." - வெளிப்படையாக கூறிய ஓவியா..! "தனிமையில் அந்த பழக்கம் எனக்கு இருந்தது..." - வெளிப்படையாக கூறிய ஓவியா..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.