ஒரே வாரத்தில் படு குழிக்குள் விழுந்த கட்சி - என்ன காரணம்..? - நிறுபிக்கும் "புதுயுகம்" சர்வே முடிவுகள்..!


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள் மட்டுமல்லாது, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் களம் காண்பதால் பல்முனை போட்டி நிலவுகிறது. 
 
ஆனாலும் கடும் போட்டி என்னவோ, அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு அமைப்புகளும் மீடியா நிறுவனங்களும் சர்வேயை நடத்திவருகின்றன. 
 
 
ஒவ்வொரு சர்வேயும் வெவ்வேறு விதமான முடிவுகளை தெரிவிக்கின்றன. அந்தவகையில், ”புதுயுகம்” தொலைக்காட்சி நடத்திய சமீபத்திய சர்வேயின் படி அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது. 
 
இந்த தொலைக்காட்சி புதிய தலைமுறை தொலைகாட்சியின் கிளை ஆகும். ஏற்கனவே, புதிய தலைமுறை தொலைகாட்சியில் திமுக கூட்டணி 150+ இடங்களை வென்று ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் கூறப்படிருந்தது. 
 
 
இது பிப்ரவரி மாதம் நடந்த பழைய சர்வே ஆகும். இந்த பழைய சர்வேயின் ஃபாலோ அப் சர்வேயாக வெளியாகியுள்ள புதுயுகம் வெளியிட்டுள்ள சர்வே முடிவுகள் படி, ஒரே வாரத்தில் அதிமுகவிற்கான ஆதரவு அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
 
இந்த சர்வே முடிவுகள், ஒரே வாரத்தில் அதிமுகவிற்கான ஆதரவு எகிறியிருப்பதை காட்டுகிறது. முதல் சர்வே முடிவில் 59 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2வதாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள், அதிமுக கூட்டணி 131 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

 
திமுக ஏற்கனவே 150+ தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக சர்வே முடிவு தெரிவித்த நிலையில், 2வது கருத்துக்கணிப்பில் 50+ தொகுதிகளை இழந்து 102 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக 53% மக்கள் தெரிவித்துள்ளனர். இது அதிமுக அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளதோடு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது என்பதை காட்டுகிறது.

தொகுதிகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி 131 இடங்களில் வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி 102 இடங்களிலும் மற்ற கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெறும் என்றும் புதுயுகம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

ஒரே வாரத்தில் படுகுழிக்குள் விழுந்த திமுக 

கடந்த ஒரே வாரத்தில் திமுக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதற்க்கான முக்கிய காரணம் அடவடியான பேச்சுகளும், ஆபாச பேச்சுகளும் தான் என்கிறார்கள். 

கட்சியின் மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட பேச்சாளர்கள் கூட பேச தயங்கும் வார்த்தைகளை திமுக தலைவர்களே ஆயாசமாக பேசிவிட்டு செல்கின்றனர். பல பேச்சுகளை உச் கொட்டிவிட்டு மக்களும் கடந்து சென்று விட்டார்கள். 

ஆனால், சமீபத்தில், திமுகவின் துணை பொது செயலாளர் ஆ.ராசா அவர்கள் தமிழக முதல்வரின் தாயாரை இழிவு படுத்தும் விதமான வார்த்தையை பிரயோகப்படுத்தியதும், முதலில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று வீராப்பு காட்டியதும் தான் திமுகவின் இந்த சட சட வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் ஆறே நாட்கள் உள்ள நிலையில் களம் அதிமுகவிற்கே சாதகமாக உள்ளது என்று இந்த சர்வே மூலம் அறிய முடிகின்றது.


ஒரே வாரத்தில் படு குழிக்குள் விழுந்த கட்சி - என்ன காரணம்..? - நிறுபிக்கும் "புதுயுகம்" சர்வே முடிவுகள்..! ஒரே வாரத்தில் படு குழிக்குள் விழுந்த கட்சி - என்ன காரணம்..? - நிறுபிக்கும் "புதுயுகம்" சர்வே முடிவுகள்..! Reviewed by Tamizhakam on March 30, 2021 Rating: 5
Powered by Blogger.