"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்.." - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..!


அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன மகேஸ்வரி தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். 
 
இதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வர அதை சரியான சமயத்தில் பயன்படுத்திக்கொண்டார். சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார்.
 
இதையடுத்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றெடுத்தார். இருந்தும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீப நாட்களாக இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி ட்ரெண்டாகி வருகிறார்.
 
33 வயதாகும் மகேஸ்வரியின் கவர்ச்சியை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் உருவாகி விட்டது. தன் ரசிகர்களை திருப்தி படுத்த தற்போது கருப்பு வெள்ளை கவர்ச்சியில் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. 
 
சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 

அந்த வகையில், தற்போது ஸ்ட்ரெய்ட்டன் செய்த முடியுடன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரான்ஸ் படத்துல வரும் நஸ்ரியா-ன்னு நெனசிட்டோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்.." - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..! "ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்.." - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 18, 2021 Rating: 5
Powered by Blogger.