"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்.." - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..!


சமீபத்தில் ஒரு 2K kids என்ற போர்வையில், சிறுவனும் சிறுமியும், காதலிப்பது போன்றும், அதற்கு அவர்களின் பெற்றோர் ஆதரவு தெரிவிப்பது போன்றும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலான நிலையில், பலத்த எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியது. 
 
இணையத்தில் குட்டி வடிவேலு என்ற அடைமொழியில் இருந்த சிறுவனும், இன்னொரு சிறுமியும் காதலிப்பது போன்றும், அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்துடன் தான் இது நடக்கிறது என்பது போல பேசிக் கொள்ளும் இந்த வீடியோ காட்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். 
 
இந்த வீடியோக்களை பார்க்கும் சிறுவர், சிறுமியர் தவறான உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.சமூக வலைதளங்களில் 'டிக் டாக்'கில் தனது காதல் லீலைகளை பதிவிட்ட சிறுமியை குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 
 
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு, சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் முகநுால் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும், 'டிக் டாக்' மூலம் வீடியோக்களை பகிர்ந்து கொண்டனர். 
 

இந்த விபரம் இருவரது பெற்றோர்களுக்கு தெரிந்தும் 'டிக் டாக்' வீடியோக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து கடலுார் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
 
அதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், பண்ருட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராதிகா ஆகியோர், நேற்று மேல்பட்டாம்பாக்கத்தில் விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு, கடலுார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இத னை அறிந்த 90'ஸ் கிட்ஸ், இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சிலாகித்து வருகிறார்கள்.

"மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்.." - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..! "மருமகளே..-வை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய 90'ஸ் கிட்ஸ்.." - என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.