முதன் முறையாக நீச்சல் உடையில் குளு குளு போஸ் - பூமிகாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகாவின் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பலரும் ஒரு சில படங்களில் ஆளே அட்ரஸ் தெரியாமல் போவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான். அப்படி தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நடிகை பூமிகா. 
 
2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தவர் பூமிகா. அதன் பின்னர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 
 
கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் பூமிகா தெலுங்கு, இந்தி திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
 
கவர்ச்சி காட்ட முடியாததால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போன பூமிகா, தற்போது 42 வயதில் கவர்ச்சி ப்ளஸ் மார்டன் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 
 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பூமிகா தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.அந்த வகையில், நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.


 
இதனை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலேயே இப்படி மின்னுறீங்களே என்று வர்ணித்து வருகிறார்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் குளு குளு போஸ் - பூமிகாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் குளு குளு போஸ் - பூமிகாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 19, 2021 Rating: 5
Powered by Blogger.