"டூ பீஸ் உடையில் காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..." - வைரல் போட்டோஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழில் 1990ஆம் ஆண்டு வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஈஸ்வரி ராவ். தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ஈஸ்வரி ராவ். 
 
தமிழை காட்டிலும் தெலுங்கு மொழியில் அதிகளவிலான படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். 
 
இதில் செல்வி என்ற கதாப்பாத்திரத்தில் திருநெல்வேலி ஸ்லாங்கில் பிச்சு உதறியிருப்பார். இந்நிலையில் ஈஸ்வரி ராவ் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்தார்.
 
அதில் நடிகர் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக கூறியுள்ளார். அந்தப் படத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் சூடுபிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 
 
 
மேலும் மற்ற மொழிகளில் இருந்தும் தனக்கு வாய்ப்புகள் வரிசை கட்டியிருப்பதாக கூறியுள்ளார்.கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து வரும் நடிகை ஈஸ்வரி ராவ், நடிகர் யாஷ் ஒரு ஃபிரண்ட்லி பர்சன் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 
 
 
நடிகை ஈஸ்வரி ராவ், ஆல வைகுந்தபுரமுலு என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதனை தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 


இதில் சில படங்கள் லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், இளம் வயதில் டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ்-ஆ இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

"டூ பீஸ் உடையில் காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..." - வைரல் போட்டோஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! "டூ பீஸ் உடையில் காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..." - வைரல் போட்டோஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 07, 2021 Rating: 5
Powered by Blogger.