"என்ன பொண்ணுடா... செஞ்சு வச்ச சிலை.. " - அதிர வைக்கும் அழகில் அணு சித்தாரா..! - அரண்டு கிடக்கும் நெட்டிசன்கள்..!

 
கடந்த, 2013ல் பட்டாஸ் பாம்ப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனு சித்தாரா, ஹேப்பி வெட்டிங் படம் மூலம் கவனம் ஈர்த்தார். அடுத்தடுத்து இவர் நடித்த ஃபக்ரி, ராமண்டே ஏதன் தோட்டம், படையோட்டம், ஒரு குட்டநாடன் பிளாக், அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டு, சுபராத்திரி போன்ற படங்கள் அனுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தன. 
 
சிறுவயது முதலே நடனம் கற்று வரும் அனு சித்தாரா, படையோட்டம் படத்தில் நடித்த மீரா டீச்சர் கேரக்டர் பெரிய அளவுக்கு ரீச்சானது. அதேபோல், ராமண்டே ஏதன் தோட்டம் படத்தில் மாலினி கேரக்டரும் அனுவுக்கு பெரிய வெளிச்சம் கொடுத்தது. 
 
2019-ல் வெளியான பொதுநலன் கருதி தமிழ் படத்திலும் அனு சித்தாரா கேமியோ ரோலில் நடித்திருந்தார்.கோலிவுட்டில் கோலோச்சிய முன்னணி நடிகைகள் பலரிடமும் இருந்த காம்போ நடிப்பு பிளஸ் நடனம். இயல்பிலேயே கிளாசிக்கல் டான்ஸரான அனு சித்தாரா, ராமண்டே ஏதன் தோட்டம் படத்தில் நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாகவும் அசத்தியிருப்பார். 
 
அந்தப் படத்தில் கணவரின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் மனைவியாக, 10 வயது மகளின் தாயாக, குஞ்சாக்கோ கோபனுடனான நட்பு என நடிப்பிலும் அனு சித்தாரா காட்டிய வெரைட்டி அவருடைய நடிப்பை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது.
 
 
திரையில் தங்களுக்குப் பிடித்தமான நட்சத்திரங்கள் தோன்றினாலே கொண்டாடும் மனநிலை கொண்டவர்கள் நம் தமிழ் ரசிகர்கள். ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்து கொண்டாடிய முந்தைய தலைமுறையின் அடியொற்றி இன்றும் தங்களின் ஆதர்ஸ நட்சத்திரங்களுக்கு விசில் மூலமாகவும் கரகோஷங்கள் மூலமாகவும் கொண்டாட்ட வரவேற்புகள் கொடுப்பதுண்டு. 
 
 
நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ஒருவிதமான மனதுக்கு நெருக்கமான குட்ஃபீலைக் கொடுக்க வேண்டும் என்பது கடைக்கோடி சினிமா ரசிகனின் விருப்பமாக இருக்கும். அப்படி ஒரு மனதுக்கு நெருக்கமான குட்ஃபீலை அனு சித்தாராவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கொடுக்கிறது. 
 
 
அவர் நடிக்கும் படங்கள் மட்டுமல்ல, அவரது இன்ஸ்டா பேஜில் இருக்கும் ஒவ்வொரு வீடியோ, போட்டோவும் இதற்கு சாட்சியாக நிற்கின்றன. கொரோனா லாக்டௌனில் அவர் பகிர்ந்த டான்ஸ் வீடியோக்கள் வைரலாகின. அனு சித்தாராவுக்கு இந்த குவாலிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகத் தமிழ் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.


அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோடி வரும் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.. என்ன பொண்ணுடா... செஞ்சு வச்ச சிலை.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"என்ன பொண்ணுடா... செஞ்சு வச்ச சிலை.. " - அதிர வைக்கும் அழகில் அணு சித்தாரா..! - அரண்டு கிடக்கும் நெட்டிசன்கள்..! "என்ன பொண்ணுடா... செஞ்சு வச்ச சிலை.. " - அதிர வைக்கும் அழகில் அணு சித்தாரா..! - அரண்டு கிடக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 06, 2021 Rating: 5
Powered by Blogger.