பாரதிராஜா பட ஹீரோயின் போல மனதை அள்ளும் மிர்ணாளினி..! - உருகும் நெட்டிசன்ஸ்..!

 
டிக் டாக் உலகம் முழுவதும் பரவியதன் மூலம் அதனால் பயனடைந்தவர்கள் ஏராளமான பேர் உள்ளனர். ஆனால் டிக் டாக் வருவதற்கு முன்பு டப்ஸ்மாஷ் என்ற ஒரு செயலின் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் மிர்ணாளினி ரவி. 
 
டிக் டாக் போலவே பாடலுக்கும் வசனத்திற்கும் நடித்துக் காட்டி எடுக்கப்படும் வீடியோக்கள் எல்லாராலும் பார்க்கப்படும். அப்படி வளர்ந்த மிருணாளினி ரவி தொடர்ந்து வாய்ப்புக்காக சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காத்திருந்தார். 
 
அதுமட்டுமில்லாமல் போட்டோஷூட்டும் அவ்வப்போது நடத்தி வந்தார் மிருணாளினி. சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 
 
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்த அந்த படத்தில் ஏலியன் ஆக நடித்திருந்தார். 
 
அதன்பின் தெலுங்குக்கு சென்ற மிருணாளினி அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். மெல்லிய கவர்ச்சி காட்டி அந்த படத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கும் மிருணாளினி, சமூகவலைதளத்தில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

பாரதி ராஜா பட ஹீரோயின் கணக்காக பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் மிளிரும் மிர்ணாளினி ரவியை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து கவிதைகளை எழுதி வருகிறார்கள்.

பாரதிராஜா பட ஹீரோயின் போல மனதை அள்ளும் மிர்ணாளினி..! - உருகும் நெட்டிசன்ஸ்..! பாரதிராஜா பட ஹீரோயின் போல மனதை அள்ளும் மிர்ணாளினி..! - உருகும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.